வியாழன், 13 மார்ச், 2025

உன் கடவுள்

ரூபமோ அரூபமோ !

பெயருள்ளதோ பெயரற்றதோ !

கல்லோ மரமோ மண்ணோ !

அறிவியலோ ஆன்மீகமோ !

மதமோ நம்பிக்கையோ !

ஆத்திகமோ நாத்திகமோ !

ஜகமோ சூன்யமோ !

இருப்பவரோ இல்லாதவரோ !

ஜடமோ உயிரோ !

எப்பவுமே உள்ளதோ இல்லை 

முதன் முதலில் கண்டதோ !

பஞ்ச பூதங்களோ !

பெற்றோரோ மூதாதையோ !


எது

நிரந்தரமின்மையையும் 

நிச்சயமற்றதையையும் 

சகஜமாக 

ஸ்திரமாக 

உன்னை 

எதிர்கொள்ள வைக்கிறதோ 

அதுவே 

உன் கடவுள்.